ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த BMW கார் நிறுவனம் உலக நாடுகளின் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.BMW கார் என்றாலே மக்கள் மிகவும் விரும்பி வாங்க நினைப்பார்கள். இந்த வரிசையில் தற்போது BMW கார் வகைகளில் புதியதாக BMW x4 என்ற புதிய வகை கார் தற்பொழுது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த காரை சென்னையில் உற்பத்தி செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
BMW x4 வகை கார் இரண்டு வகைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்று பெட்ரோலை (XDRIVE 301) பயன்படுத்தும் வகையிலும் மற்றொன்று டீசலை(XDRIVE30D) பயன்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
BMW X4 வகை காரின் விலையானது 70.50 லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெட்ரல் பயன்படுத்தும் காரின் விலை ஆகும். மற்றொரு வகையான டீசல் பயன்படுத்தும் BMW X4 வகை கார்களுக்கு 72.50 லட்ச ரூபாய் விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய BMW X4 வகை கார் மற்ற பழைய மாடல்களை விடவும் மிகவும் சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த கார் ஒரு ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆகும். இந்த காரில் புதியதாக கிட்னி கிரில் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கார் 5.8 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பிஎம்டபிள்யூ x4 வகைகளைப் பற்றி கருத்து தெரிவித்த பிஎம்டபிள்யூ நிறுவனம் லக்சரி ஸ்போர்ட்ஸ் கார்களை பிரபலப்படுத்தியது எங்களுடைய நிறுவனம். தனித்துவமான காரை விரும்புவர்கள் இந்த வகை கார்களை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் இந்த காரில் அனைவரையும் கவரும் வகையில் பல வசதிகளும் வடிவமைப்புகளும் இடம்பெற்றிருக்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.