பிடிக்காத வேலை! சில ஆண்கள் தங்களுக்கு பிடிக்காத வேலை மிகவும் சிரமப்பட்டு செய்வார்கள் சில பெண்களும் கூட வீட்டு வேலையை பிடிக்காமல் ஏனோதானோ என்று மிகவும் பொறுமையாக செய்து கொண்டிருப்பார்கள் இதற்கெல்லாம் என்னதான் முடிவு. பிடிக்காத ஒரு வேலை ஆனால் அதை நீங்கள் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது. அதுவும் ஒரு நாள் இரண்டு நாள் அல்ல வருட கணக்காக நீங்களே அந்த வேலையை செய்ய வேண்டும் என்றால் எப்படி சாத்தியம் முடியுமா? முடியும்…

சிலர் தங்களுக்கு இந்த வேலை பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே வருடக்கணக்காக ஒரே அலுவலகத்தில் அதே வேலையை செய்து கொண்டிருப்பார்கள் இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது? அதற்கான வழிமுறை ஒன்றை எழுத்தாளர் “திரு.நாகூர் ரூமி அவர்கள் அடுத்த வினாடி என்ற அவருடைய புத்தகத்தில் மிகவும் அழகாக குறிப்பிட்டு இருக்கிறார்”.
உங்களுக்கு ஒரு வேலை பிடிக்கவில்லையா? அதனை செய்வதற்கு மிகவும் சலிப்பாக உள்ளதா செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறதா? அதுபோன்ற நேரங்களில் திரு நாகூர் ரூமி அவர்கள் கூறிய இந்த வழிமுறை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அப்படி என்ன வழிமுறை எது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? வாங்க தெரிந்து கொள்வோம்.
அதற்குப் பெயர்தான் இயந்திர முறை அதாவது ஒரு இயந்திரம் தன்னுடைய வேலையை எப்படி செய்கிறதோ அதாவது எந்த ஒரு விருப்பம் வெறுப்பும் இன்றி தன்னுடைய வேலை என்று நினைத்து செய்து முடிகிறது அதுபோலத்தான் நாமும் நமக்கு பிடிக்காத வேலையாக இருந்தாலும் அதனை செய்யும் போது எந்த உணர்ச்சிகளுக்கும் ஆளாகாமல் எதைப்பற்றியும் சிந்திக்காமல் அதை செய்து முடிக்க வேண்டும் அவ்வளவு தான் என்ற ஒரு சின்ன மனப்பான்மையுடன் செய்தால் எந்த ஒரு பிடிக்காத வேலையும் மிக விரைவில் செய்து முடிக்கலாம்.
முதலில் அந்த வேலை தனக்கு பிடிக்கவில்லை என்ற எண்ணத்தை மனதில் இருந்து அழிக்க வேண்டும் அது தனக்கு பிடித்திருப்பதாக என்ன கூட வேண்டாம்! அது தேவையற்றது ஆனால் அதை இப்பொழுது நான் செய்து முடிக்க வேண்டும்! என்ற தீர்க்கமான எண்ணம் மட்டுமே போதுமானது. மற்ற எண்ணங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு இதை முடித்தாக வேண்டும் அவ்வளவு தான் என்ற ஒற்றை மனநிலை அந்த வேலையை எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் சிறப்பாக செய்ய உதவும்.
உதாரணத்திற்கு பெண்கள் பலருக்கு தங்கள் வீடுகளில் பாத்திரம் கழுவும் விளக்கும் வேலை பிடிக்கவே பிடிக்காது! இருந்தாலும் அவர்கள் அதனை வருட கணக்காக செய்து கொண்டு தன் இருக்கிறார்கள் அவர்களிடம் போய் எப்படி? அந்த வேலையை நீங்கள் சலிக்காமல் வருடக்கணக்காக செய்கிறீர்கள்? என்று கேட்டால் அவர்களிடம் கிடைக்கும் ஒரே பதில் இயந்திர மனப்பான்மை இப்போது அந்த வேலையை நான் செய்து முடிக்க வேண்டும் அவ்வளவுதான் என்ற எண்ணம் அவர்களுடைய மனதில் இருக்கும்.