ஆடி மாத ராசி பலன் 2026 (ஜூலை 17 – ஆகஸ்ட் 17) – நட்சத்திர மாற்றங்கள், கிரக பெயர்ச்சிகள் மற்றும் ராசிகளுக்கான பலன்கள்
அம்மன் பக்தர்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் நல்ல பலன்கள் அவர்கள் ஏழு தலைமுறைக்கும் கிடைக்கும் என்பது பெரியவர்கள் வாக்காகும். அம்மனை விரதம் இருந்து வழிபடுவதோடு மட்டுமல்லாமல் தான தர்மங்களும் அன்னதானங்களும் அம்மனுக்கு மிகவும் பிடித்த நெய்வேத்தியமான கூழும் காய்ச்சி ஊற்றுவது மிகவும் பலன் அளிக்கக்கூடிய செயலாகும்.
ஆடி மாதத்தில் ஏன் அதிகமாக கூல் காட்சி ஊட்டகிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியுமா? ஏனென்றால் ஆடி மாதத்தில் கூழ் ஊற்றும் நிகழ்வானது காலம் காலமாக நடைபெற்று வருகிறது அன்றைய காலகட்டங்களில் காம்பும் கேழ்வரகும் திணை அரிசிகளும் பல சிறுதானியங்கள் மட்டுமே மக்களுக்கு எளிதாக கிடைத்தன. அதனால் அவற்றை கூழாக காய்ச்சி அம்மனுக்கு ஊற்றினார்கள். ஏழை எளியவர்களின் உணவாக இருந்தது சிறுதானியங்கள் தான். அது விவசாயத்திற்கு பெரிதும் பல மொழிக்கும் வகையிலும் இருந்தது.
ஆடி வெள்ளி 2026 – முழு விவரம் படிக்க
ஆடி மாதத்தில் பொதுவாக சூரியன் கடக ராசியில் பயணிப்பதால் இறை சக்தியின் அதாவது நேர்மறை சக்திகளின் ஆதிக்கம் அதிகமாக காணப்படும்.
Table of Contents
ஆடி மாதம் தமிழர்களின் ஆன்மிக வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. 2026 ஆம் ஆண்டின் ஆடி மாதம் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 17 வரை நடைபெறுகிறது. இந்த மாதத்தில் சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைவதுடன், சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதால் பல்வேறு ஆற்றல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும், புதன், சுக்கிரன், செவ்வாய் போன்ற கிரகங்களின் நிலைமைகளும் மனிதர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக மட்டுமல்லாமல், மன உறுதி, ஆன்மிக வளர்ச்சி மற்றும் குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும் காலமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் நிகழும் கிரக இயக்கங்கள் தொழில், பணவரவு, கல்வி, திருமணம், ஆரோக்கியம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.
ஆடி மாத முக்கிய கிரக மாற்றங்கள்
சூரியன் சிம்ம ராசி பெயர்ச்சி
ஆடி மாத தொடக்கத்தை குறிக்கும் இந்த பெயர்ச்சி அதிகாரம், தலைமைத்துவம் மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அரசு வேலைகள், நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
புதன் இயக்கத்தின் தாக்கம்
புதன் கிரகத்தின் நிலை கல்வி, தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் அறிவாற்றல் சார்ந்த துறைகளில் முன்னேற்றத்தை உருவாக்கும். மாணவர்கள் மற்றும் வணிகர்களுக்கு இது சாதகமான காலமாக அமையும்.
சுக்கிரனின் பலன்
சுக்கிரன் காதல், குடும்ப உறவுகள் மற்றும் பொருளாதார வளத்தை குறிக்கும் கிரகம். அதன் சஞ்சாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி, திருமண யோகம் மற்றும் வசதி வாய்ப்புகளை அதிகரிக்கும்.
செவ்வாயின் தாக்கம்
செவ்வாய் என்றாலே ஆற்றல் மற்றும் தைரியத்தின் காரகன். புதிய முயற்சிகள், சொத்து தொடர்பான செயல்கள் மற்றும் போட்டி தேர்வுகளில் ஈடுபடுபவர்களுக்கு உற்சாகத்தை அளிப்பவன்.
ஆடி மாத நட்சத்திர மாற்றங்களின் சிறப்பு
ஆடி மாதத்தில் அஸ்வினி முதல் ரேவதி வரை அனைத்து 27 நட்சத்திரங்களிலும் சந்திரன் சஞ்சரிக்கிறார். இதனால் மனநிலை, முடிவெடுக்கும் திறன் மற்றும் குடும்ப சூழ்நிலைகளில் தினசரி மாற்றங்கள் காணப்படலாம்.
* பூரம், உத்திரம், ஹஸ்தம் நட்சத்திரக்காரர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஏதேனும் புதிய தொடக்கங்களுக்காக காத்திருந்தாள் அவற்றை தொடங்குவதற்கு இது சரியான நேரம் ஆகும்.
* சுவாதி, அனுஷம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் இறை மீதான நம்பிக்கை அதிகமாகி ஆன்மீக பாதையில் செல்வதற்கு நினைப்பார்கள்.
* ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் ஆடி மாதத்தில் குடும்பத்துடன் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இன்புற்று வாழ்வார்கள்
* அவிட்டம், சதயம், ரேவதி நட்சத்திரக்காரர்கள் ஆடி மாதத்தில் தொழில் மற்றும் விவசாயம் தொடர்பான முடிவுகளை சரியாக எடுத்து அவற்றில் வளர்ச்சியும் காண்பார்கள்.

12 ராசிகளுக்கான ஆடி மாத பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த ஆடி மாதத்தில் தங்களுடைய உடல் நலத்தில் மட்டும் சிறிது கவனம் வைத்துக் கள்ள வேண்டும் அதேபோல் குடும்பத்தினர் உடைய ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றபடி மேஷ ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் தெரியும் அதேபோல் வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்வுகளும் நடைபெற வாய்ப்புகள் உள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஏதேனும் சொத்து தகராறு இருந்தால் அதில் இவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். கோர்ட் மற்றும் வழக்குகளில் இவர்களுக்கு சாதகமாக அமையும். பொருளாதார நிலையும் மேம்படும். சேமிப்பு குறித்து அதிகமாக ஆலோசித்து சேமிக்க தொடங்குவார்கள்.பொருளாதார நிலை வலுப்பெறும்.
மிதுனம்
மாணவர்களாக இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு கல்வியில் அனைத்து விதமான முன்னேற்றங்களும் ஏற்படும். வேலை தேடும் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அவர்களின் மனதில் இருக்கும் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
கடகம்
கடக ராசி காரர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு செலவு அதிகரிக்கும் அந்த செலவும் சேமிப்பாக ஆக்கிக் கொள்வது அவசியம். பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து செலவுகளை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சியுங்கள். உங்கள் ராசியில் சூரியன் பயணிப்பதால் உங்களுக்கு உத்வேகமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தை பொறுத்தவரையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிச்சயம் இருக்கும்.
சிம்மம்
ஆடி மாதத்தில் சூரியன் சிம்ம ராசியிலும் பயணிப்பதால் உங்களுக்கு கூடுதல் பணவரவு குடும்பத்தில் மரியாதை கூடுதல் தன்னம்பிக்கை அதிகரித்தல் செய்யும் தொழிலில் முன்னேற்றங்கள் ஆகியவை கிடைக்கும். ஆடி மாதத்தில் தொடக்கத்தில் மட்டுமே சூரியன் உங்கள் ராசியில் பயணிப்பதால் முதல் ஒரு வாரம் மட்டுமே இந்த நிலைமை தொடரும் அடுத்தடுத்த நாட்களில் இது குறையவும் வாய்ப்பு இருக்கிறது.
கன்னி
வெளிநாடு செல்வதற்காக காத்திருந்த கன்னி ராசிக்காரரகளுக்கு ஜாக்பாட் அடிக்கிறது வெகு விரைவில் வெளிநாட்டு பயணம் கைகூடும். புதனின் பார்வை உங்களுக்கு அனுகூலமாக இருப்பதால் அனைத்து விதமான நன்மைகளும் கைகூடும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காணலாம். திருமண முயற்சிகள் கைகூடும். கூடா நட்பு கேடு விளைவிக்கும் நல்ல நண்பர்களுடன் பயணிக்கவும்.
துலாம்
துலாம் ராசி காரர்கள் நண்பர்களின் துணையோடு அவர்களது தொழிலில் முன்னேற்றத்தை காண்பார்கள். நண்பர்கள் மட்டுமல்லாது உறவினர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்ப உறவுகள் மற்றும் சுற்றம் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் அதோடு மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். முயற்சி செய்தால் தொழிலில் மேலும் மேலும் முன்னேற வாய்ப்புகள் உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு போட்டி என்றால் மிகவும் பிடிக்கும் இந்த ஆடி மாதத்தில் யாருடன் எதில் வேண்டுமானாலும் நீங்கள் போட்டி போடலாம் வெற்றி உங்களுக்கு தான். செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்த அமர்ந்திருப்பதால் உங்களுக்கு தன்னம்பிக்கையும் முயற்சியும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றி நிச்சயம். தைரியமாக புதிய முயற்சிகளில் இறங்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அளிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. எல்லா விதத்திலும் முன்னேற்றத்தை தரும் மாதமாக இந்த ஆடி மாதம் அமையும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த ஆசைகள் நிறைவேறும் மாதமாகவும் ஆடி மாதம் இருக்கும். தொலைதூர பயணங்கள் மேற்கொள்வீர்கள். பயணங்களால் நல்ல ஆதாயங்களும் கிடைக்கும்.
மகரம்
கடினமான முயற்சிகளை மேற்கொண்டு இருந்தால் நிச்சயமாக அதற்கான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தொழில் விகுதியாக நல்ல பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். புதிதாக ஏதேனம்ப முதலீடு செய்ய யோசித்து இருந்தால் அதனை மறு ஆய்வு செய்யுங்கள். முதலீடுகள் செய்யும் முன்பு கவனமாக இருங்கள். கணினி தொடர்பான துறைகளில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்
நீண்ட நாள் பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவீர்கள். கடன் தொல்லைகள் இருந்தால் சற்று குறையவும் வாய்ப்பு இருக்கிறது. தொழில்கள் செய்யும் பழுது சற்று கவனம் தேவை இருந்தாலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
மீனம்
ஆன்மீகப் பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள். குடும்ப வாழ்க்கையின் நலமாக இருக்கும். தொழில் செய்யும் மீன ராசிக்காரர்கள் சற்று கவனமாகவும் நிதானமாகவும் இருங்கள். தொழில் ரீதியாக அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. நல்ல நண்பர்களை தேர்ந்தெடுகள் வாழ்க்கை நல்லபடியாக அமையும்.
ஆடி மாத பரிகாரங்கள்
* ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில் தரிசனம் செய்யுங்கள்.
* எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடலாம்.
* துர்க்கை மற்றும் மாரியம்மன் அருளைப் பெற சக்தி ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம்.
* ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவது நன்மை தரும்.
* ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பான பலனை தரும்.
ஆடி மாதம் 2026 ஆன்மிக சக்தி, மன உறுதி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தை வழங்கும் சிறப்பான காலமாக அமைகிறது. கிரகங்களின் சஞ்சாரம் மற்றும் நட்சத்திர மாற்றங்கள் ஒவ்வொரு ராசியினருக்கும் வெவ்வேறு பலன்களை வழங்கினாலும், பக்தி, பொறுமை மற்றும் நேர்மறை எண்ணங்களுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அம்மன் அருளால் இந்த ஆடி மாதம் உங்கள் குடும்பத்தில் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி மற்றும் வளம் பெருக வாழ்த்துக்கள்.