புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் – New Year Wishes in Tamil

VIZHIMAA தமிழ் களஞ்சியம்

By VIZHIMAA

Updated on:

புத்தாண்டு வாழ்த்து கவிதைகள்;

புத்தாண்டை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாட நினைப்பார்கள்,சிலர் கேக்குகள் வெட்டி கொண்டாடுவாராகள்,சிலர் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று இரவை இனிமையாக்குவார்கள்,சிலர் புத்தாண்டு பிறக்கும் போது தூங்காமல் விழித்திருந்து அனைவருக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று எண்ணுவர். புது வருடத்தை வரவேற்க தயாராக இருக்கும் அனைவருக்கும் அதனை இனிமையாக வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் உடன் இருக்கும்.அந்த எண்ணத்திற்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இங்கு புத்தாண்டு வாழ்த்து கவிதைகள் பதிவிடப்பட்டுள்ளன.

ஒரு புதிய ஆண்டின் தொடக்கம் என்பது மனிதர்களுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடியதாக உள்ளது.அதனாலேயே பெரும்பாலான மக்கள் புத்தாண்டை மிகவும் பிரபலமாக கொண்டாடுகிறார்கள்.ஒரு வருடத்தின் தொடக்கம் எப்படி அமைகிறதோ அதுபோலவே அந்த வருடம் முழுவதும் அமையும் என்று பெரும்பாலானோர் எண்ணுகிறார்கள்.

இந்த வருட புத்தாண்டை இனிய கவிதைகளுடன் தொடங்கவே இந்த புத்தாண்டு கவிதைகள் இங்கே இடம்பெறுகிறது…

புத்தாண்டு கவிதைகள்;

உங்களுடைய பழைய முயற்சிகள் எல்லாம் இந்த புது வருடத்தில் வெற்றி பெறட்டும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மலர்ச் செண்டுகளாய் மனம் மலர்ந்தே இருக்கட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

காதலன் காதலியை தேடுவது போல உங்கள் கனவுகளை தேடுங்கள் இந்த புத்தாண்டில்

உள்ளத்தில் உற்சாகம் பொங்க இல்லத்தில் நிம்மதி தங்க…தொழில் செல்வம் சேர இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஒரு நாள் வாழும் மலர்களே சிரித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நூற்றாண்டு வாழப்போகும் நாம் ஏன் வருத்தப்பட வேண்டும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பூத்த மலர்களால் வாசம் கொள்ளட்டும் உங்கள் இதயம் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எங்கெங்கோ வாழும் இதய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வலிகளை மறந்து வழிகளை கண்டுபிடிக்கும் ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும்

happy new year wishes in tamil

புதிதாக பிறந்த உணர்வை இந்த புத்தாண்டு உங்களுக்கு வழங்கட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

உங்கள் கனவுகளை நோக்கிய காதல் பயணங்கள் இந்த பொன்னான ஆண்டில் தொடங்கட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மாற்றங்கள் அனைத்தும் ஏமாற்றம் தாராத ஆண்டாக இந்த புத்தாண்டு தொடங்கட்டும்

பூவின் வாசமாய் புத்துணர்ச்சி கொள்ளட்டும் உங்கள் இதயம் இந்த புத்தாண்டில்

அமைதியான வாழ்க்கை நிம்மதியான இல்வாழ்க்கை என் இனிமையாய் அமையட்டும் இந்த புத்தாண்டு

மகிழ்ச்சி நிறைந்த மங்கல ஆண்டாக இந்த புத்தாண்டு அமைய என் இனிய நல்வாழ்த்துக்கள்

அன்பை நாடி ஆரோக்கியம் கூடி இல்வாழ்க்கை இனித்து புவி வாழ்க்கை பூரணமடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்

தொட்டது துலங்கி தொடர் வெற்றிகளை தரும் நல்ல ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஏற்றங்கள் தரும் மாற்றங்கள் நிறைந்த ஆண்டாய் இந்த புத்தாண்டு அமையட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

மனம் நிறையும் மாற்றங்கள் நிறைந்த ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும்

நாளும் பொழுதும் நல்ல நினைவுகளால் சூழ்ந்து நன்மை தரும் நல்ல ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும்

மறைத்து வைத்த ஆசைகள் எல்லாம் மகிழ்ச்சியுடன் நிறைவேறும் ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும்

முயற்சிகள் எல்லாம் வெற்றி என்னும் முத்தாய் மலர இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நெஞ்சில் தோன்றிய கனவுகள் எல்லாம் நிஜமாய் மாறிட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கை உங்கள் கைகளில் வசப்படட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தங்கம் போன்ற  தமிழ் சொந்தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வசந்த காலமாய் வாழ்க்கை மாறிட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பூ போன்ற உங்கள் புன்னகை சொல்லட்டும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி உண்டாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நெஞ்சில் நிம்மதி நிறைந்த நிறைவான ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும்

கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் கனிவான ஆண்டாக இந்த ஆண்டு அமையட்டும்

அன்பும் அமைதியும் என்றும் நிலைத்திட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நேரம் மட்டுமே நேர்மையானது இந்த உலகில்,யாருக்காகவும் காத்திருக்காது.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

புத்தாண்டை வரவேற்க பூச்செண்டுகள் வேண்டாம் உங்கள் புன்னகை போதும்…

 

Happy new year wishes in Tamil

 

இந்த புத்தாண்டு உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை தந்து உங்கள் வாழ்க்கையை வசந்தமாக்கட்டும்

 

பட்ட துன்பங்கள் எல்லாம் இந்த புத்தாண்டில் பறந்து போகட்டும்;நினைத்த நல்லது எல்லாம் மலர்ந்து போகட்டும்

 

காலம் என்ற நொடி முள் நகர 365 நாட்கள் தேவைப்படுகிறது இங்கே….

 

காதலியை நேசிப்பது போல் காலத்தையும் நேசியுங்கள்;காலம் கை கொடுக்கும்; புத்தாண்டு புதுவரவாகட்டும்

 

இந்த முத்தான புத்தாண்டில் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்

 

பனிபோல் விலகும் துன்பங்களை நினைத்து துயரக்கடலில் மூழ்கிய உங்களை கரை சேர்க்கும் கலங்கரை விளக்கமாய் இந்த புத்தாண்டு அமையட்டும்

 

மலரும் புத்தாண்டில் மனிதம் வாழ்ந்து மண்ணில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஜுவ ஒளி போல் வாழ்க்கை ஒளிமயமாகட்டும் இந்த புத்தாண்டில்…

 

மனநிறைவை வழங்கும் மங்கள ஆண்டாக மலரும் புத்தாண்டு அமையட்டும்

 

நெஞ்சம் நிறைந்த நினைவுகளை வசந்த காலமாய் நினைத்து பார்க்க இறைவன் அளித்த ஆண்டாக இந்த ஆண்டு மலரட்டும்

 

Happy new year wishes in Tamil

 

மத்தாப்பாய் மனமகிழ மலர்செண்டாய் முகம் மலர புத்தாண்டில் புத்துணர்வு கொள்ளட்டும் உள்ளம்….

 

12:01 வரை முழித்திருக்க வேண்டும் என்று எண்ணி சரியாக 11;30 மணிக்கு தன்னை மீறி தூங்கிய நினைவுகள் இன்னும் நியாபகமாய்….

 

கல்லில் சிலையாய்;மண்ணில் மலையாய் என்றும் உயர்ந்தே இருங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

காத்திருந்த காலம் கைக்கு வந்ததாய் நினைத்து உழையுங்கள் வராத அதிர்ஷ்டம் நிச்சயம் வரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

இந்த ஒருநாள் கொண்டாட்டம் இந்த வருடம் முழுக்க புத்துணர்ச்சி தரும்

 

உழைப்பை நேசியுங்கள்;உள்ளமும் இல்லமும் வளமாக்க உழைப்பால் மட்டுமே முடியும்

 

புதிதாய் பிறந்ததாய் உள்ளம் நினைக்க பூக்களின் வாசமாய் நம்பிக்கை தெளிக்க நல்லதொரு நாளாய் தினமும் விடிய வருக புத்தாண்டே வருக

 

பூத்த மலராய் தொடங்கட்டும் புத்தாண்டு

 

புது ஒளியாய் புது வழியாய் உங்கள் வாழ்க்கை மலரட்டும் இனிய புத்தாண்டு காலை

 

வெயில் தீண்டாத பனியாய் சோகம் தீண்டாமல் சொர்க்கமாய் இந்த ஆண்டு இனிதே தொடங்கட்டும்

 

Happy new year wishes in Tamil

 

தீண்டும் மெல்லிய தென்றலாய் இந்த ஆண்டு சுகம் தர இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

மழலையின் மொழியாய் மகிழ்ச்சி பொங்கிட கவிதையில் பிழையாய் காலம் இனித்திட புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

கொட்டும் மழையாய் மகிழ்ச்சி ஆர்ப்பரித்து ஆனந்தம் தந்திட புத்தாண்டு புதிதாய் வளம் தர வாழ்த்துக்கள்

 

நம்பிக்கைக்குரிய நல்லவர்களுக்கும் அன்பிற்குரிய அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

நேசங்கள் புதிதாய் பூத்திட புத்தாண்டு பூங்கொத்து தரட்டும்

 

எடுத்த சப்தங்களை எண்ணியபடி நடக்க இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

என் உள்ளம் நிறைந்த உறவுக்கும் ஊருக்கும் இனிய புத்தாண்டு தின வாழ்த்துகள்

 

மகிழ்ச்சியை மனதார உணர்ந்து மழை வெள்ளம் போல் ஆனந்தம் பொங்கிட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

Happy new year wishes in Tamil

 

புதிதாய் பூத்த உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

வெற்றியை அள்ளித் தரட்டும் இந்த புத்தாண்டு

 

மலரும் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக மாறட்டும்

 

இனிதே தொடங்கட்டும் இந்த இனிய ஆண்டு

 

புத்தாண்டு தரும் மாற்றங்களை மனதார வரவேற்க தயாரவோம்

 

இறைவனின் திருவருளால் இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமையட்டும்

 

Happy new year wishes in Tamil

 

காலம் கனியும் என்று காத்திருந்தவர்களுக்கு கடவுள் கண் திறக்கட்டும் இந்த இனிய நாளில்

 

மனம் கண்ட காயங்களுக்கு மருந்திடும் ஆண்டாக இந்த வருடம் அனைவருக்கும் அமையட்டும்….

 

இன்றைய விடியல் புது ஒளியில் புது வழியில் அமையட்டும்…இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

மனதின் ஆசைகள் மாற்றமின்றி நிறைவேற புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

காலை பனியாய் கவலைகள் தெளிய கதிரவனின் ஒளியாய் புத்தாண்டு புத்துணர்ச்சி தரட்டும்

 

நட்சத்திர கூட்டம் போல் ஒன்றாக இணைந்து நம்பிக்கை ஒளியை நண்பர்களுடன் பகிர்ந்திடுங்கள்

 

கனவுகள் எல்லாம் நினைவாகி நித்தம் சுகம் தர புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

நினைவுகளில் நீங்காத சந்தோஷ நினைவுகள் தேங்கிட வரும் புத்தாண்டு வாழ்த்து சொல்லட்டும்

 

என்றென்றும் இளமையாய் எண்ணத்தில் வளமையாய் வைத்திருக்கட்டும் இந்த புத்தாண்டு

 

Happy new year wishes in Tamil

 

மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மனதை தயாரிக்கும் நாளாக இந்த நாள் அமையட்டும்

 

ஏற்றங்கள் காண மாற்றங்கள் பலவற்றை காணும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்

 

வயது கூடுவது போல் வளமும் கூட வளர்பிறை வாழ்த்துக்கள்

 

இன்று பூத்த மலரின் வாசமாய் உங்கள் நேசம் அனைவருக்கும் கிடைக்கட்டும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

உன்னால் முடியும் என்ற வார்த்தை உள்ளத்தில் ஒலித்தால் உன் வாழ்க்கை ஊருக்குள் ஜொலிக்கும்

 

வருடத்தின் முதல் நாளை வசந்தமென நினைத்து வரவேற்று மகிழுங்கள் வருடத்தின் மீதி நாட்கள் முதல் நாள் ஆகாது.

 

எவ்வளவு தான் உயர்ந்தாலும் பணிவு என்பது உள்ளத்தில் இல்லை என்றால் பாறை மீது படும் நீர்த்துளியாய் சிதறிப் போகும் சினேகங்கள் எல்லாம்

 

Happy new year wishes in Tamil

 

மண்ணில் வாழும் ஒவ்வொரு உயிர்க்கும் மதிப்பளித்து வாழ்வது ஒன்றே உயர்ந்த வாழ்க்கை…. புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

இந்த வருடம் சுற்றுச்சூழலை சுகம் பெறச் செய்யும் வருடமாக மாற்றுவோம்…

 

பூமிப்பந்தின் சுழற்சியை பூச்செண்டு கொடுத்து கொண்டாடுவோம்…

 

ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறப்பதாய் உள்ளம் நினைத்தால் உழைத்து செழித்திடலாம் இந்த உலகினிலே….

 

பூத்த மலராய் தொடங்கட்டும் புதுவருடம் புதுப்பொழிவுடன்…

 

நாட்கள் நகர்வது போல் சில மனிதர்களும் நகர்ந்து செல்வார்கள் என்பதை உணரும் ஆண்டாக இந்த புது வருடம் அமையட்டும்

 

மனிதம் என்பது மனிதர்கள் மட்டும் வாழ்வதை குறிப்பதல்ல;மண்ணில் உள்ள அனைத்து உயிர்களையும் வாழ வைப்பதே மனிதம்;உணர்ந்து செயல்படுவோம் புது வருடத்தில்

 

கட்டுக்கட்டாக காசு இருப்பவனுக்கும் கால் வயிற்று கூழுக்கு வழியில்லாதவனுக்கும் காலம் என்பது ஒன்று தான்…இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

மண்ணை வளமாக்கும் ஆண்டாக வரும் வருடம் அமையட்டும்…வசந்தம் பரவட்டும்

 

காலம் மாறுவது போல் சில மனிதர்களும் மாறுவார்கள் என்பதை மறவாதீர்கள்-இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

மண்ணை பொன்னாக்கும் விவசாயக்குடி மக்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

Happy new year wishes in Tamil

 

காலங்கள் மாறினாலும் மாறாத அன்பு கிடைப்பது வரம்.அந்த வரம் இந்த வருடத்தில் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்

 

வருடங்கள் முன்னேறுவது போல் உங்கள் வாழ்க்கையும் முன்னேறட்டும்

 

கடவுளின் நல்லாசியுடன் காத்திருந்தவை யாவும் கைகளில் சேர வாழ்த்துக்கள்

 

என் மாறாத அன்பிற்கு பாத்திரமாகிய மதிப்புக்குரிய என் அன்பானவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

மாற்றங்களை ஏற்படுத்தும் வருடங்களை மறவாதிருப்போம் …. புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

வருடங்கள் நம்மை வயதாக்குகின்றன;

 

கனவுகளை கைகளில் சேர்க்கும் காலம் அனைவருக்கும் கிட்டும் இங்கே சமமாக…

 

மாறுவது மாறிப்போகட்டும்;மாறாதது நம் அன்பாகட்டும்; புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

 

Happy new year wishes in Tamil

 

VIZHIMAA தமிழ் களஞ்சியம்

VIZHIMAA