சமீபத்தில் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான மதராசி திரைப்படத்தில் பாடல்கள் மிகவும் பெரிதளவில் பேசப்பட்டது அதிலும் மிகவும் ஹிட்டான பாடல் என்று பெயர் பெற்ற பாடல் சலம்பல சலம்பல பாடல் என்று அனைவருக்கும் தெரியும்.

அனிருத்தின் பிரம்மாண்டமான பின்னணி இசையில் உருவாகியிருந்த மதராசி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் எப்பொழுதும் போல் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்துமே ஹிட் என்ற நிலையில் தான் இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அமைந்துள்ளது.
இதில் காதல் தோல்வி கானா பாடலாக உருவாகி இளைஞர்களின் இடையே பெரிய வரவேற்பை பெற்ற சலம் பல பாடல் எல்லோராலும் ரீல்ஸ் மற்றும் முணுமுணுக்கும் பாடலாக இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இருந்தாலும் சலம்பல என்ற வார்த்தை சிலருக்கு வித்தியாசமாக இருக்கலாம்.
சென்னை பாஷை என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் உண்மையில் சென்னையின் மொழி தான் நம் செந்தமிழின் சொற்களை அதிகமாக பயன்படுத்துகிற மொழியாக உள்ளது. ஏனென்றால் சலம்பல என்பது ஒரு சுத்தமான தமிழ் சொல் அதற்கு “அதிகமாக பேசுதல்,அதிகமாக சத்தமாக பேசுவது, அதிகமாக அரட்டை அடித்தல், வெற்று பேச்சுகள் அதிகமாக பேசுவது”என்று பொருளாகும்.
Salambala – சலம்பல்- “அதிகமாக பேசுதல்,அதிகமாக சத்தமாக பேசுவது, அதிகமாக அரட்டை அடித்தல், வெற்று பேச்சுகள் அதிகமாக பேசுவது”
சலம்பல என்ற பாடலை முனுமுனுக்கும் அனைவருக்கும் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்…