---Advertisement---

விண்ணப்பிக்க மறக்காதீர்கள்?ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு -2025

On: September 17, 2025 11:09 AM
Follow Us:

பத்தாம் வகுப்பு முடித்து இருந்தால் போதும் உங்களுக்கு உங்களுடைய சொந்த ஊரிலேயே அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது அதனால் இதுவரை விண்ணப்பிக்காமல் இருக்கும் எல்லோரும் விரைவாக விண்ணப்பித்து விடுங்கள்…

Tnrgd-government-jobs-in-tamil
Tnrgd-government-jobs-in-tamil

TNRGD எனும் தமிழக அரசு அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் ஒன்றான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வலைதளத்தில் இரவு காவலர் ஜி ஓட்டுனர் அலுவலக உதவியாளர் மற்றும் பதிவரை எழுத்தர் போன்ற நான்கு பணியிடங்களுக்கு அறிவிப்பானது வெளியாகி உள்ளது.

தேர்வு முறை என்பது இந்த பணியிடங்களுக்கு கிடையாது அதேசமயம் உங்களுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் சில வயது காரணிகளைக் கொண்டு நேர்முகத் தேர்வின் படி இந்த வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

இதற்கு முதலில் நீங்கள் உங்கள் ஊராட்சி ஒன்றியத்தில் அல்லது மாவட்டத்தில் எத்தனை ஊராட்சிகளில் இந்த காலிப்பணியிடங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை ஊராட்சி ஒன்றியங்களில் எத்தனை காலிப்பணியிடங்கள் உள்ளன என்பதை தங்களுடைய அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நீங்கள் அதற்கேற்றார் போல் உங்களுடைய மாவட்டத்திலையோ அல்லது உங்களுக்கு அருகில் உள்ள மாவட்டத்திலையும் உங்களது பணிக்காக நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

எனவே இந்த அரிய வாய்ப்பை அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இந்த பதிவில் நோக்கமாக உள்ளது.

நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய வலைதளத்தில் தொடர்பு இருக்கை இந்த பதிவில் இறுதியில் இணைத்து இருக்கிறோம். அதோட உங்களுடைய பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் போன்றவை நீங்கள் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்களாக உள்ளது கூடுதலாக உங்களுடைய போட்டோ மற்றும் கையெழுத்து டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்து பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க செப்டம்பர் 31 கடைசி நாள் ஆகும்.

Application Link – TNRGD

அண்மை பதிவுகள்