தாய்மாமன் கவிதைகள்

VIZHIMAA தமிழ் களஞ்சியம்

By VIZHIMAA

Updated on:

தாய்மாமன் உறவு;

தமிழ்நாட்டில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் ஆராதிக்கப்படும் உறவுகளில் ஒன்று தான் தாய்மாமன் உறவு.காலம் காலமாக மிகவும் கெத்தாக உலா வரும் ஒரு உறவு என்றால் அது தாய்மாமன் உறவு தான்.ஏனைய உறவுகளுக்கு இல்லாத உரிமையும் உணர்வும் தாய்மாமனுக்கே உண்டு என்று நம்பி வாழ்கிறது இந்த தங்க தமிழ்நாடு.இந்த பதிவில் அந்த உன்னதமான தாய்மாமன் உறவிற்கு பகிர்ந்து கொள்ளும் வகையில் கவிதைகள் பதிவிடப்படுகிறது.ஆடி 18 அன்று வருடந்தோறும் தாய்மாமன் தினம் கொண்டாடப்படுகிறது,அதனையொட்டி

தாய்மாமன்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பதிவிடப்படுகிறது.

தாய்மாமன் கவிதைகள்;

Thaaimaman kavithaigal

தமிழ்நாட்டின் மரபு
தாய்மாமன் உறவு

தாய்மாமன் இல்லாத
சபை; தலை இல்லாத
பிழை

மண்ணின் வாசமும்
மாமனின் பாசமும்
ஒன்று;அது என்றும்
நீங்காது

நல்லது கெட்டது
எல்லாத்துலயும்
அண்ணன்,தம்பி வந்தா
தான் மனசு நிறையும்
அக்கா, தங்கைக்கு

இன்றைய
தலைமுறை மாமன்
மச்சான் என்று
அழைப்பதற்கு ஆதார
சுருதி தாய்மாமன்
உறவு

எத்தனை கோடி
கொடுத்தாலும்
எல்லோருக்கும்
கிடைக்காத உறவு
தாய்மாமன்

Thaaimaman kavithaigal

எத்தனை பேர் சீர்
செஞ்சாலும் மனசு
நிறைவது மாமன்
சீர்ல தான்

மாமன் துணை
மண்ணுல வாழுற
வரைக்கும் தேவை

Thaaimaman kavithaigal

தாயின் அன்பை
தரும் ஒரு உறவு
என்பதால் தான்
அந்த உறவிற்கு
தாய்மாமன் என்று
பெயர்

பெண்ணின்
பிறந்த வீட்டு
பெருமையை அவள்
புகுந்த வீட்டில்
காப்பது அவளின்
நடத்தை மட்டும் அல்ல;
அவள் உடன் பிறந்தவனின்
நடத்தையும் தான்

எல்லா சபையும்
நிறைவதும் உயர்வதும்
தாய்மாமன் சீரால் தான்

உடன் பிறந்தவளுக்கு
திருமணத்திற்கு
பட்டுத் துணி
எடுத்துக் கொடுப்பதிலிருந்து
அவள் மரணத்திற்கு பிறகு
கோடித்துணி வாங்கி போடும்
வரை ஓய்வதில்லை
இந்த தாய்மாமன் உறவு

எந்த பிரச்சனையாக இருந்தாலும் அண்ணன் தம்பியிடம்
இருந்து அழைப்பு வந்தால்
தான் என் அம்மா ஆறுதல்
அடைவாள்…

Thaaimaman kavithaigal

எத்தனை உறவுகள்
வந்தாலும் தாய்மாமனின்
உறவை ஈடுகட்ட
முடியாது.

தாய்மாமனின் அன்பை
அளப்பது அன்னையின்
அன்பை சந்தேகிப்பதற்கு
சமம்.

தங்கை மகளை
தன் மகனுக்கு திருமணம்
செய்யும் ஒரு தாய்மாமனின்
மனதில் அவள் தங்கையின்
மகள் அல்ல;தன் மகள்
போன்றவள்;

மாமா என்ற வார்த்தையை
அழைக்கும் போது
மரியாதை வார்த்தையில்
மட்டும் அல்ல;மனதிலும்
இருக்கும்

காலத்துக்கும் சீர்
செஞ்சு
உடன்பிறந்தவளுக்கு
கடன்பட்ட உறவாகவே
வாழ்வது தாய்மாமன்
மட்டுமே….

Thaaimaman kavithaigal

அக்கா பொண்ணுக்கு
காதுகுத்துனா கம்மல்
வாங்குறதுல இருந்து
கல்யாணம் னா புடவை
வாங்குற வரைக்கும்
தாய்மாமன் உறவு
நீளமானது…

ஆண்பிள்ளைக்கு
தாய்மாமன் என்பவன்
மலை மாதிரி பலமான
ஒரு உறவு
பெண்பிள்ளைக்கு
பனி மாதிரி இதமான
ஒரு உறவு
ஆனால் காலம் முழுவதும்
தொடரும் ஒரே ஒரு
உறவு

மாமன் சொல்ற
வார்த்தைல மரியாதை
இருக்கோ இல்லையோ
அன்பு நிறையவே இருக்கும்

கடன் வாங்கியாவது
என் அக்கா மகளுக்கு
சீர் செய்யனும் னு
நினைக்கிறவன் தாங்க
தாய்மாமன்

தாய்மாமன் சீர்ல
தாங்க ஒரு
பெண்ணோட
பொறந்த வீட்டு
பெருமையே அடங்கி
இருக்கு….

நூறு நண்பர்களுக்கு
இணையான ஒரு
உறவு தாய்மாமன்

தாயின் அன்பை
அன்பை தரும்
ஒரு ஆண்
தாய்மாமன் ஆகிறான்

எந்த பந்தலும்
தாய்மாமன் பந்தம்
இல்லாம நிறையுறது
இல்ல; அதனாலதான்
தாய்மாமனுக்கு கெத்து
குறையுறது இல்ல
இந்த தமிழ்நாட்டில…

Thaaimaman kavithaigal

ஒரு ஆண்
தாய்மாமன் உறவை
மனதால் உணர்வான்;
ஒரு பெண் தாய்மாமன்
உறவை மரியாதையால்
உணர்வாள்

விட்ரா மச்சான்னு
மாமன் சொன்னா…
மலையே வந்தாலும்
பயம் வராது…

தாய்மாமன் உறவு தான்
தமிழ்நாட்டின் சொத்து
தாய்மாமன்னாலே ஒரு
கெத்து

உடன்பிறந்தவளுக்கு
காலத்துக்கும் கடன்பட்ட
ஒரு உறவு தாய்மாமன்

நல்லது கெட்டது
எல்லாத்துலயும்
தாய்மாமன் உறவு
தனித்து நிற்கும்

தாய்மாமன் என்றாலே
தன்னம்பிக்கை தான்

மாமன் சீர்ல
சபை நிறையுதோ
இல்லையோ
மனசு நிறையும்…

எவ்ளோ பெரிய
பிரச்சனை வந்தாலும்
மாமன் வந்தா
மஸ்து தான்

இந்த மண்ணோட
வாசம் மாறினாலும்
மாமங்காரன் பாசம்
மாறாது;அதுதான்
இந்த தமிழ் மண்ணின்
பெருமை

Thaaimaman kavithaigal

இன்றைய இணை(ளை)ய
தலைமுறை மாமன்
மச்சான்னு முறை சொல்லி
அழைக்க காரணம்;
இருக்குற எல்லா உறவுகளிலும்
தாய்மாமன் உறவில் தான்
நட்பு என்ற உணர்வு அதிகமாக
இருக்கும்….

தாய்மாமன் கூட
இருந்தா…தலைக்கு
ஒன்னுனாலும் பயப்பட
தேவையில்லை…

தாயின் அன்பை
உள்ளூர உணர
வைப்பது தாய்மாமன்
உறவே…

அக்கா பொண்ணுக்கு
கைவளையல் முதல்
கால்கொலுசு வரை
வாங்கி போட்டு
அழகு பார்க்கும்
ஒரு உறவு தந்தைக்கு
பின் தாய்மாமனே….

எத்தனை உறவுகள்
சுற்றி இருந்தாலும்
ஒரு விஷேசம் வந்தா
கண்ணு தேடுவது
தாய்மாமனை தான்…

எந்த உறவினரும்
நண்பனை போன்ற
உணர்வை தருவதில்லை
தாய்மாமனை தவிர

தன் கடைசி காலம்
வரை என்
உடன்பிறந்தவளுக்கு
நான் கடமை பட்டவன்
என்ற உணர்வு தான்
தாய்மாமன்…

Thaaimaman kavithaigal

மாமா என்று
யாரையேனும்
அழைத்தால் முதலில்
நியாபகத்திற்கு வருவது
தாய்மாமன் தான்

தாய்மாமன் உறவு
தனித்துவமானது

மலையேற மட்டும்
இல்ல;மலைய
தாங்கவும் முடியும்
தாய்மாமன் கூட
இருந்தா…

தாலாட்டில் கூட
மாமன் அடித்தாரோ
மல்லிய பூ செண்டால
என்று மென்மையாக
தான் இடம்பெறும் மாமன்
உறவு…

பாசங்காட்றதுல
தாய்மாமன அடிச்சிக்க
ஆளில்ல…

உன்னை உயர்த்தும்
ஒரு உறவு
தாய்மாமன்

சீர் கொடுத்து
பேர் எடுக்கும்
ஓர் உறவு
தாய்மாமன்

அண்ணன் தம்பி
வாங்கி கொடுத்த
பொருள் மட்டும்
அடுக்கி
வைக்கப்பட்டிருக்கும்
அலமாரியில் பத்திரமாக…

தாயுடன் பிறந்ததினால்
அவனை தாய்மாமன்
என்கிறோம்…ஆனால்
தந்தை வழியில் மாமன்
முறைகள் மாமா என்ற
வார்த்தையோடு
முடிந்துவிடுகிறது இங்கே
அதுதான் தாய்மாமனின்
சிறப்பு

Thaaimaman kavithaigal

உடன் பிறந்தவளுக்கு
எவ்ளோ கஷ்டம் வந்தாலும்
விட்டு விலகாத ஒரே
உறவு தாய்மாமன்

தாயை போன்று
தன் மறுமகப்
பிள்ளையை நேசிப்பதால்
தான் அவன் தாய்மாமன்
என்றழைக்கப்படுகிறான்

தாய்மாமன் னு
ஒரு உறவு இருந்தா
ஒருத்தன் எதுக்கும்
பயப்பட தேவையில்லை…
ஏன்னா…எதுன்னாலும்
தாய்மாமங்காரன் வந்து
நிப்பான்

முன்பெல்லாம்
பெண்ணுக்கு
சொத்தில் பங்கு
தராமல் தாய்மாமன் சீரு
என்ற பெயரில்
அதனை பிரித்து
கொடுத்ததே தமிழனின்
மரபு…

எவ்வளவு தான்
முயன்றாலும் எந்த
உறவும் தாய்மாமன்
இடத்தை நிரப்புவதில்லை

தாய்மாமன் உறவில்
அன்பு கூடுதல் வேடிக்கை
உணர்வோடு இருக்கும்

ஒரு குழந்தையோட
அம்மா இறந்துட்டா
அந்த குழந்தைய
பாத்துக்குவாங்கன்னு
நம்பி விடுற ஒரே
இடம் தாய்மாமன் வீடு
தான்….

தாய்மாமன்னாலே
கெத்து;எல்லோருக்கும்
வேனும் இந்த சொத்து

மனசு நிறைய
மாப்பிள னு கூப்பிடுற
ஒரு உறவு தாய்மாமன்

Thaaimaman kavithaigal

அக்கா பொண்ண
ஆயுசுக்கும் அழ
விடக்கூடாதுன்னு
நினைக்கிறவன் தான்
தாய்மாமன்…

எவ்வளவு சொந்தம்
இருந்தாலும் தாய்மாமன்
மாரி வராது…

என் மாமன்
மனசு தங்கம் னு
தான் எல்லா குழந்தையும்
நினைக்கும்

தந்தைக்கு பிறகு
தன்னை அதிகமாக
நேசிக்கும் ஒரு ஆண்
என்று நினைப்பது
என் தாய்மாமனை தான்

எத்தனை முறை
திட்டினாலும் ஏன்
மாமா என் மேல
கோவமா என்று
உரிமையோடு நாம்
கேக்கும் ஒரே இடம்
தாய்மாமன்…

ஒரு தாயின் மனசும்
தாய்மாமனின் மனசும்
ஒன்று தான் அன்பில்…

ஒரு தந்தையின்
இடத்தை தாயால்
நிரப்ப முடியும்
ஒரு தாயின் இடத்தை
தந்தையால் நிரப்ப
முடியும் ஆனால்
இவர்கள்
இருவருமில்லாமல் போனால்
அந்த இடத்தை ஒரு
தாய்மாமனால் தான்
நிரப்ப முடியும்

Thaaimaman kavithaigal

தாய்மாமனது
கண்டிப்பு கடுமையாக
இருக்காது;ஒரு
நண்பன் தரும்
ஆறுதலாய் இதமாகவும்
ஒரு தந்தையின்
அறிவுரை போல்
ஆழமாகவும் இருக்கும்.

என் மகிழ்ச்சியான
தருணங்களில் எத்தனை
பேர் என்னருகில்
இருந்தாலும் என் கண்கள்
தேடுவது என் மாமவை
தான்

நட்பை போல் ஒரு
உறவு நம்மை
தட்டிக்கொடுக்குமே
ஆனால் அது தாய்மாமனே

ஒரு பெண்ணுக்கு
அண்ணனாகவோ
தம்பியாகவோ பிறக்கும்
ஒரு ஆண் காலம் முழுக்க
கடங்காரன் தான்…

VIZHIMAA தமிழ் களஞ்சியம்

VIZHIMAA